close
Choose your channels

அருள்நிதியும் அரசியலில் குதிக்கின்றாரா?

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அரசியல் மேடையில் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் கருணாநிதியின் இன்னொரு பேரனும் நடிகருமான அருள்நிதியும் அரசியலில் குதிக்கின்றார். ஆனால் அவர் குதிப்பது நிஜ அரசியலில் அல்ல, திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், அருள்நிதியின் அடுத்த படம் அரசியல் பின்னணியுடன் கூடிய விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபகாலமாக அனல் பறக்கும் வகையில் அரசியல் கட்சிகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், தனது படத்திலும் விறுவிறுப்பான அரசியல் வசனங்கள், காட்சிகள் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஆக்சஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருள்நிதி தற்போது மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தையும் ஆக்சஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.