அருள்நிதி-ராதாமோகனின் 'பிருந்தாவனம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பிருந்தாவனம்'. கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அருள்நிதி நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 26ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதே தேதியில்தான் சமுத்திரக்கனியின் 'தொண்டன்' திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, விவேக், தான்யா, செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். வான்சன் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேகானந்த் ஒளிப்பதிவும், ஜெய் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

கோலிவுட் திரையுலகில் தரமான படங்களை கொடுத்து வரும் ராதாமோகன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர்களின் 'பிருந்தாவனம்', மற்றும் 'தொண்டன்' ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

More News

எஸ்பிபிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை! அமெரிக்காவில் பிரபல பாடகிக்கு துயரம்

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அவருடைய பாஸ்போர்ட், இசைக்குறிப்புகள் ஆகியவை ஒருசில முக்கிய பொருட்கள்ல் திருடப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அதே நிலைமை அதே அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகிக்கும் தற்போது நேர்ந்துள்ளது

ஜெயம் ரவியின் 'வனமகன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

'தனி ஒருவன்', 'போகன்' போன்ற படங்களை அடுத்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த படம் 'வனமகன்'.

பிரதமர் மோடியிடம் 'டாய்லெட்' குறித்து பேசிய '2.0' நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவரும், சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகருமான அக்சயகுமார் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு?

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன.

'பாகுபலி' பாணியில் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர சாதனை திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.