மாயன் காலண்டரை மண்ணாக்கி... நயன்தாரா பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற ஒரே சூப்பர்ஹிட் வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் நெல்சன். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சிவகார்த்திகேயன் உள்பட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்சனின் நெருங்கிய நண்பரும் இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனது அன்பு அண்ணன் மற்றும் குருநாதன் நெல்சன் அவர்களுக்கு எனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாயன் காலண்டரை மண்ணாக்கி, மக்கள் மனதில் பொன்நகை எந்நாளும் மின்ன, இந்த தம்பியின் அன்பு வாழ்த்துக்கள் அண்ணே’ என்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் நெல்சன் ’மாயன் காலண்டர் லெவலுக்கு எல்லாம் போக வேணாம். பாட்டு கண்டிப்பா இருக்கு’ என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து கூறிய அருண்ராஜா காமராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’டாக்டர்’ திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் குறைந்தது ஒரு பாடலாவது எழுதுவது உறுதி என்பது தெரியவந்துள்ளது.

More News

தல அஜித்தை நினைத்து பாருங்கள்: தமிழ் சினிமாவின் 'சுஷாந்த்சிங் ராஜ்புத்'களுக்கு இளையராஜா மகள் அறிவுரை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறு அன்று மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்யப்பட்ட விவகாரம் ஒரு வாரம் ஆகியும் இன்னும் சமூக வலைதளங்களில்

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? ஒரு விளக்கம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்தியா சீனா மோதல் எதிரொலி: டிக்டாக்கில் இருந்து விலகிய பிக்பாஸ் தமிழ் நடிகை! 

இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தீ எரிந்தாலும் எனக்கு கவலையில்லை: டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய ரஜினி நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்