close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷாட்பூட் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உள்பட பலர் நடிக்க உள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், ராஜேஷ் வைத்யா இசையில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. யுனிவெர்சல் கிரியேஷன் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஏற்கனவே சினேகா, பிரசன்னா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.