ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷாட்பூட் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உள்பட பலர் நடிக்க உள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், ராஜேஷ் வைத்யா இசையில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. யுனிவெர்சல் கிரியேஷன் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஏற்கனவே சினேகா, பிரசன்னா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் கந்துவட்டி கேட்டேனா? சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை விளக்கம்

பாஜகவில் சமீபத்தில் இணைந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

'அரண்மனை 3' படத்தில் இணைந்த உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விரைவில் வரவுள்ள திருவிழா தேதியில் இந்த படம் ரிலீசாகும்

ஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

ஏற்கனவே உணவகங்களில் உண்ணும்போது நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகிறோம்.

நதியில் குழந்தைப்போல விளையாடும் விஜய் பட நடிகை… வைரல் வீடியோ!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான “பாய்ஸ்”

ஹாட் பிக் வெளியிட்ட நடிகை கிரண்… கமெண்ட்ஸ்களால் அலறவிடும் நெட்டிசன்ஸ்!

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடித்த “ஜெமினி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கிரண்.