எதிர்பார்த்த அதே டைட்டில் தான்.. அருண் விஜய் அடுத்த படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்..!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மாலை டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகனாக இருந்தும் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் தான் தற்போது படிப்படியாக வெற்றி படங்களை தந்து கொண்டிருப்பவர் அருண் விஜய் என்பதும் கூடிய விரைவில் அவர் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருண் விஜயின் 36வது படத்தை ’மான்கராத்தே’ இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரெட்ட தல’ என்று டைட்டில் வைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான அட்டகாசமான போஸ்டரில் ’ரெட்ட தல’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருண் விஜய்யின் அட்டகாசமான ஆக்சன் காட்சியின் போஸ் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும் இந்த படத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்த சித்தி இத்யானி, தன்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'அயோத்தி' இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு.. தயாரிப்பாளர் இவர்தான்..சசிகுமார் தான் மீண்டும் ஹீரோவா?

கடந்த ஆண்டு வெளியான 'அயோத்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

கமல், விஜய்யை அடுத்து அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு

ராமர் மட்டுமல்ல.. இன்னும் சில புது கோமாளிகள்.. களை கட்ட போகும் 'குக் வித் கோமாளி 5'

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சாதகமாக வந்த நீதிமன்ற தீர்ப்பு.. ராமராஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் படம் ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தந்தை படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்.. மீண்டும் ரூ.1000 கோடி வசூல் கிடைக்குமா?

பிரபல நடிகரின் திரைப்படம் கடந்த ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆன நிலையில் அவருடைய அடுத்த படத்தில் மகள் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும்