இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 'சிங்கம்' லொகேஷனுக்கு செல்லும் 'யானை' படக்குழு!

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘யானை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

’சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்களும் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் சென்டிமென்டாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நடந்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மாதத்திற்குள் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி வரும் டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் தீபாவளியன்று படத்தின் டீசர் அல்லது டிரெய்லரை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும், தீபாவளிக்கு பின் புரமோஷன் பணிகளும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. .

அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 66' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உண்மையா?

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் 66வது திரைப்படமான 'தளபதி 66'

பூஜா ஹெக்டேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பீஸ்ட்' நடிகை!

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை

தாமரை செல்வியை மீண்டும் அழவைத்த அபிஷேக்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் தனது சொந்த கதையை கூறிய நிலையில்,

நியூ பேஷன் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொள்ளும் நடிகை தமன்னா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா.

பட புரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் செய்த நல்ல காரியம்… ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த்.