திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'யானை' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,August 16 2022]

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜீ5 ஓட்டி தளத்தில் வெளியாகி இருப்பதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது

ஜீ5 தளத்தில்  ஆகஸ்ட் 19, 2022 முதல்,  இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர்  அருண் விஜய் நடித்த யானை என்ற அதிரடி  ஆக்‌ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன்,  வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களை தந்த இயக்குனர் ஹரி எழுதி இயக்கியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 தளம்  தற்போது  இந்த ஆக்‌ஷன்  நிறைந்த, உணர்ச்சிகரமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை, ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு வருகிறது.

இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ்த்தப்பட்டிருந்தது, அவற்றில் அருண் விஜய் நிகழ்த்திய சிங்கிள்-ஷாட் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தவிர, இயக்குனர் ஹரியின் வலுவான கம்பேக்கிற்காக “ யானை”  பாராட்டை பெற்றது குறிப்பிடதக்கது. பொதுவாக இயக்குநர் ஹரி தன் திரைப்படங்களில்  ஆக்‌ஷன், உணர்வுகள், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்களை  சரியான கலவையுடன் தந்து, பார்வையாளர்களின் நாடித் துடிப்புக்கு ஏற்ப பொழுது போக்கை வழங்குவதில் பாராட்டைப் பெறுபவர். மேலும் இப்படத்தில், ஜீவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டு மொத்த நட்சத்திர நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு கதைக்கு மேலுமொரு பேரலங்காரமாக அமைந்திருந்தது.

ஜீ5  தொடர்ந்து சிறந்த உள்ளடக்கம் கொண்ட அசல் தொடர்களை வழங்கி வருகிறது. விலங்கு, அனந்தம், ஃபிங்கர் டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கி சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என அனைத்து தொடர்களும் ரசிகர்களிடம் பெரிய பாரட்டுக்களை பெற்றது. பல தரமான படைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களில் சிறந்த படைப்புகளை தந்து, ஜீ5 அதன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை  வழங்கி வருகிறது.

More News

'சீதாராமம்' நடிகையின் டாப்லெஸ் புகைப்படங்கள்: திடீரென வைரலானதால் பரபரப்பு!

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவான 'சீதாராமம்' என்ற திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்தப் படம் 30 கோடி ரூபாய்

பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா? மனைவியுடன் கங்கைக்கரையில் புகைப்படம்!

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா?

கையில் குழந்தை, கணவருக்கு முத்தம்: காஜல் அகர்வால் வீட்டில் என்ன விசேஷம்?

ஒரு கையில் குழந்தை இன்னொரு பக்கம் கணவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

கர்ப்பிணி போட்டோஷூட்டில் இவ்வளவு கிளாமரா? விஜய் பட நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி!

விஜய் படத்தில் நடித்த நடிகையும் பிரபல பாலிவுட் நடிகையுமான பிபாஷா பாசு கர்ப்பிணி நேரத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அளவுக்கு அதிகமான கிளாமர்

'எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை, இவர் தான்': செளந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்!

உலகமே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று கூறிவரும் நிலையில் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த் தான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.