close
Choose your channels

 மீண்டும் இணையும் 'தடம்' கூட்டணி!

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அருண்விஜய் இரட்டை வேடங்களில் சூப்பராக நடித்திருந்தார். த்ரில் சஸ்பென்ஸ் கொண்ட ஆக்சன் படமான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் அருண்விஜய்-மகிழ்திருமேனி கூட்டணி இணைந்துள்ளது

இந்த படமும் ஒரு திகில், சஸ்பென்ஸ் ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் பணிகளை இயக்குனர் மகிழ்திருமேனி சத்தமின்றி ஆரம்பித்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது



ஏற்கனவே அருண்விஜய் தற்போது நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்', 'பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ', அறிமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் 'பாக்ஸர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கவுதம்மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படங்களிலும் அருண்விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.