close
Choose your channels

ஒதுங்கி போன உரசுவிக, பதுங்கி போன பாய்வீக: அருண்விஜய்யின் 'யானை' டிரைலர்

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக உள்ள இந்த ட்ரெய்லரில் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் சரிபாதியாக உள்ளன. குறிப்பாக முதல் ஒரு நிமிடம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் காட்சியில் அருண்விஜய், பிரியா பவானி சங்கர்,ராதிகா, அம்மு அபிராமி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் அடுத்த ஒரு நிமிட டிரைலரின் காட்சியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.

ஒதுங்கி போன உரசுவிக, பதுங்கி போன பாய்வீக, சமாதானம் பேச வந்தாலும் அரிவாளில் தானடா வெள்ளக்கொடியை எடுத்துட்டு வார்றீங்க’ என்ற ஆவேசமான அருண்விஜய் வசனத்துடன் இந்த டிரைலர் முடிவு பெறுகிறது.

அருண்விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் அம்மு அபிராமி, யோகிபாபு, ராதிகா, சமுத்திரக்கனி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் கோபிநாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos