அருண்விஜய்யின் அடுத்த படத்தின் பூஜை! பிரபல நடிகையின் சகோதரி ஹீரோயின்!

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

அருண்விஜய் நடித்த 'தடம்' சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் அருண்விஜய் நடிக்கும் புதிய படமான 'பாக்ஸர்' என்ற படத்தின் பூஜை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் மதன் படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார். பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.