அருண்விஜய்யின் 'தடம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

அருண்விஜய் நடித்த ஆக்சன் படமான 'தடம்' திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில நிர்வாக காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போனதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் அருண்விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.
 

More News

அஜித், கார்த்தி படங்களுடன் கனெக்சன் ஆன 'Mr.லோக்கல்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது.

பழங்குடி மக்களின் மேம்ப்பாட்டிற்காக ஆரியின் திட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை நடிகர் ஆரி தனது 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம்    செயல்பட உள்ளார் 

'பொதுநலன் கருதி' இயக்குனருக்கு பிரபல நடிகர் மிரட்டல்! 

'பொதுநலன் கருதி' திரைப்படம் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இயக்குனர் சீயோனின் கதை சொல்லும் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

ரஜினி-முருகதாஸ் படத்தின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் அனைவரும் லாபம் பெற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' சென்சார் தகவல்

ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' சமீபத்தில் வெளியாகி ஊடகங்களில் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.