ஹரி படப்பிடிப்பில் ஏற்பட்ட பரபரப்பு: அருண்விஜய்க்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது என்பதும், ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட அந்த ஸ்டண்ட் காட்சியின்போது திடீரென அருண்விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஐந்து நாட்களுக்கு அருண்விஜய் எந்தவித எடை அதிகமான பொருட்களை தூக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அருண் விஜய் தனது பகுதியின் சண்டைக் காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

சியான் விக்ரம் நடித்துவரும் 60வது திரைப்படமான 'சியான் 60' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பில் விக்ரம், துருவ் விக்ரம் உள்பட பலர் கலந்து

ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் பிரபலங்களின் ஒருவர் ஈரோடு மகேஷ் என்பதும் குறிப்பாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான இவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும்

ஏராளமான வித்தியாசங்கள்: ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் குறித்து கமல்ஹாசன்!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

நடிகர் வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் குறித்து விளக்கம் அளித்த பிரபல தயாரிப்பாளர்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி, மொழியைத் தாண்டி ரசிக்கப்பட்டு வருகிறது.

தல அஜித் படம் படைத்த சாதனை.....! இமான் பதிவிட்டுள்ள ட்வீட்....!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட பாடல்  புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது