அருண்விஜய்க்கு மீண்டும் ஒரு 'என்னை அறிந்தால்'

  • IndiaGlitz, [Sunday,July 30 2017]

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண்விஜய், கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் அஜித்தின் 'என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தே இயக்குனரிடம் முன்வந்து அருண்விஜய்க்கு சிறப்பான காட்சிகள் அமைய உதவி செய்தார் என்று கூறப்பட்டது. இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் அஜித் ரசிகர்களின் அன்பால் அருண்விஜய் நெகிழ்ந்து போனார்.

இந்த நிலையில் 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' என்ற பிரமாண்டமான படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அருண்விஜய் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் அவருக்கு 'என்னை அறிந்தால்' போலவே நல்ல பெயர் வாங்கித்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியாகவுள்ளதால் அருண்விஜய் இந்திய அளவில் பிரபலமடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் அஜித் ரசிகர்கள் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவத்தை பிரபாஸ் ரசிகர்களிடம் இருந்தும் அருண்விஜய் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

'சாஹோ' தவிர அருண்விஜய் நடிக்கும் இன்னொரு படத்தை 'தடையற தாக்க' படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

இன்று இயக்குனர்கள் சங்க தேர்தல்: வெற்றி பெறும் அணி எது?

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்பட பல சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்திருப்பதை அடுத்து இன்று இயக்குனர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது...

'விவேகம்' ரிலீஸ் தேதியை உறுதி செய்த அக்சராஹாசன்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இந்த படம் நாளை சென்சார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

இரண்டு மொழிகளில் ரீமேக் ஆகிறது விக்ரம் வேதா;

இந்த ஆண்டின் முதல் பாதியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் 'பாகுபலி 2' என்றால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அமோக வசூலை குவித்த படம் 'விக்ரம் வேதா' என்று கூறலாம்

பாடல் இல்லை, இடைவேளை இல்லை. சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை அடுத்து அவர் 'கெட்டவன்' மற்றும் 'பில்லா 3' படங்களில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவியது.

ஓவியாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் விருந்து: புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை கடந்த இரண்டு நாட்களாகவே வில்லி போல் காண்பித்து அவரது இமேஜை டேமேஜ் செய்வதாக காட்சிகள் அமைந்துள்ளது.