அருண்விஜய்யின் 'குற்றம் 23' படத்தின் 3 நாள் தமிழக வசூல்

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற வில்லன் அவதாரம் எடுத்த அருண்விஜய், 'குற்றம் 23' படத்தில் வெற்றிமாறன் என்ற ஹீரோ அவதாரம் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். கடின உழைப்புக்கு என்றுமே தோல்வி இருந்ததில்லை என்பதற்கு அருண்விஜய் ஒரு உண்மையான உதாரணம் என்பது இந்த படத்தின் வெற்றியால் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்நிலையில் 'குற்றம் 23' படத்தின் கடந்த வார சென்னை வசூல் குறித்த விபரங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

'குற்றம் 23' திரைப்படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.60 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ.1.18 கோடி மற்றும் கோவையில் ரூ.60 லட்சம் இந்த படம் வசூல் செய்து அருண்விஜய் படங்களின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

More News

இரண்டாவது வார இறுதி வசூலில் பட்டையை கிளப்பிய 'எமன்'

'பிச்சைக்காரன்' , 'சைத்தான்' என இரண்டு வெற்றிகளுக்கு பின்னர் விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படப்பிடிப்பு முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'.

ஜெயலலிதா மரணம் விசாரணை குறித்து ஆனந்த்ராஜ் பரபரப்பு பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டவுடன் அந்த கட்சியில் வெளியேறியவர் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ்.

விஷாலால் நாசருக்கு அவப்பெயர். நடிகர் சங்கத்தை முற்றுகையிட்ட தாணு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா, விஷால் உள்பட அனைவரும் முந்தைய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பெற்றோர் இறந்த துக்கத்திலும் கண்ணீருடன் தேர்வெழுதிய +2 மாணவி

ஒரு மாணவருக்கோ, மாணவிக்கோ +2 தேர்வு என்பது மிக முக்கியமானது. இந்த தேர்வின் முடிவுதான் அவர்களின் எதிர்கால கனவை நனவாக்கும்