close
Choose your channels

சந்தானம் படத்தின் ஜோடியாகும் அருண்விஜய் பட நாயகி!

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடித்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தடம்’. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தன்யா ஹோப் என்பது தெரிந்ததே. கர்நாடகத்தை சேர்ந்த இவர் ஒரு சில கன்னட படங்களிலும் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் தன்யா ஹோப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக முதல் முறையாக தன்யா ஹோப் நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஜீவா, சிவா நடித்த ‘கோல்மால்’ என்ற காமெடி படத்தில் நடித்த தன்யாஹோப் மீண்டும் ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos