'வணங்கான்' படத்தை அடுத்து அருண் விஜய்யின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வணங்கான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ட தல’. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்த சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் தான்யா ரவிச்சந்திரன் உள்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
அந்த வகையில் தற்போது அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். தன்னுடைய இரண்டு கேரக்டர்களுக்கும் கச்சிதமாக அவர் டப்பிங் பணியை முடித்துள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
🎙️ It’s a wrap for Arun Vijay’s powerful dubbing session for Retta Thala
— BTG Universal (@BTGUniversal) January 25, 2025
🔥 His voice adds the final layer of intensity to this action-packed entertainer
Get ready to witness his magic on the big screen soon@arunvijayno1 ' s #RettaThala pic.twitter.com/LcEYFKqE0e
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com