அருண் விஜய்யின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி.. மாஸ் டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,October 06 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், அவர் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அருண்விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்கியிருப்பது பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய். இந்த படத்திற்கு ’அச்சம் என்பது இல்லையே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’தெறி’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் என்பவரும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜசேகர் மற்றும் சுவாதி தயாரிப்பில் உருவாகும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

தென்னை மரத்தின் தெறி போஸ்: அமலாபாலின் மாலத்தீவு வீடியோ!

அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சுற்றுலா சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சலுடையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்

'தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்': விஷாலின் 'லத்தி' சிங்கிள் பாடல் ரிலீஸ்!

 நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று 'லத்தி' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே. 

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படத்தில் செல்வராகவன்.. டைட்டில், நாயகி அறிவிப்பு!

 தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் புரோடக்சன் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர்

'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்

 விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம்

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியால் விறுவிறுப்பாகும் 2ஆம் பாகம்: 'PS2' ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது