'யானை' இந்தியில் எடுத்தால் இவர்தான் ஹீரோயின்: அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அருண்விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்து உள்ளது என்பதும் தற்போது இருவருக்கும் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’யானை’ திரைப்படத்தை ஹிந்தியில் உருவாக்க முடிவு செய்தால் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி தான் இயக்க வேண்டும் என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த படத்தை அவரை தவிர வேறு யார் இயக்கினாலும் நன்றாக இருக்காது என்றும் அவர் மிக அற்புதமான இயக்குனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நானே நடித்தால் எனக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ’யானை’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அருண் விஜய் மற்றும் ஷரதா கபூர் ஆகிய இருவரும் பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த சூப்பர்ஹிட் தம்பதிகளா?

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் 'ஏகே 62' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே

விக்ரமின் 'கோப்ரா' புதிய ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு1

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என

'விருமன்' திரைப்படத்தில் திடீரென இணைந்த இளையராஜா!

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'விருமன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன்

விஜய் - ஷாம் ஸ்டண்ட் காட்சிகள்: இணையத்தில் லீக்கான 'வாரிசு' வீடியோ!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக ஏற்கனவே செய்தி

கமல் தயாரிப்பில் உதயநிதி படம்: இயக்குனர் இந்த பிரபலமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது