மீண்டும் ஒரு மேஜிக்? அஜித் குறித்து அருண் விஜய்யின் பதிவு வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித்துடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து, மறுபடியும் ஒரு மேஜிக்கை ஏற்படுத்த விரும்புவதாக நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகராக பல ஆண்டுகளாக நடித்து வந்த அருண் விஜய்க்கு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மிகப்பெரிய வெற்றி படம் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்தார். அப்போது தான், அவர் அஜித்துடன் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகுதான், அவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் சில படங்களில் பட்டையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சரியாக ’என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து, இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் சத்யா மற்றும் விக்டர் கேரக்டர்கள் மிகவும் பரபரப்பானவை என்றும், இந்த இரண்டு கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய மேஜிக்கை மீண்டும் உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அஜித்துடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அவர் கனவு காணுவது போல், அஜித்துடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவாரா? அவர் கூறிய அந்த மேஜிக் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தற்போது, அருண் விஜய் ’ரெட்டை தல’ ’இட்லி கடை’ மற்றும் ’பார்டர்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 years of #YennaiArindhaal!!💥#Sathya 🔥 #Victor 🔥
— ArunVijay (@arunvijayno1) February 5, 2025
Hope and waiting to create the same magic again!!💥✌🏽@menongautham @trishtrashers @Jharrisjayaraj pic.twitter.com/mhQsAFt0o6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com