close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது புதிதில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாரிசுகள் வரை திரையுலகில் அறிமுகமாகி தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் மகன் சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய பிரேக்கை பெற்றவர் அருண் விஜய். தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தனது மகன் அர்னவ்விஜய் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனது மகன் அர்னவ்விஜய் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா உலகிற்கு வரும் அருண் விஜய்யின் மகனையும் திரையுலகம் வாழ்த்தி வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.