close
Choose your channels

அருண்விஜய்யின் 'டீலுக்கு' கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

Saturday, August 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் 'விக்டர்' என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பின்னர் கோலிவுட் திரையுலகில் அருண்விஜய்யின் மார்க்கெட் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அருண்விஜய் நடிப்பில் உருவான 'வா டீல்' என்ற திரைப்படம் கடந்த பல மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் அதற்கு தற்போது விடிவுகாலம் வந்துள்ளது.
இந்த படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும் என உறுதியான தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து வந்துள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'U'சர்டிபிகேட் அளித்துள்ளனர். 'வா டீல்' படத்திற்கு சென்சார் போர்டின் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அருண்விஜய், கார்த்திகா நாயர், வம்சிகிருஷ்ணா, சக்தி, கல்யான் மாஸ்டர், சுஜா வருணே, சதீஷ், ஜெயப்பிரகாஷ், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'வா டீல்' படத்தை சிவஞானம் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் சென்சார் முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.