நாட்டாமையின் வேற லெவல் ஃபெர்மாமன்ஸ்: வைரலாகும் அருண்விஜய் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை அசத்தி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது நடிகர் அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது தந்தையும் நடிகருமான விஜயகுமார் அவர்கள் சிலம்பம் சுற்றும் காட்சி உள்ளது. இதைப் பார்த்து இந்த வயதிலும் தனது தந்தை ஆச்சரியமாக தனது திறமையை நிரூபித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

நடிகர் விஜயகுமாரின் சிலம்பம் சுற்றும் பாணியை பார்த்த ரசிகர்கள் பலர் ’நாட்டாமை இந்த வயசிலும் வேற லெவல் காட்டுகிறார்’ என்று பாராட்டி வருகின்றனர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது