close
Choose your channels

அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Saturday, June 12, 2021 • தமிழ் Comments

சினிமா பின்னணி உள்ளவராக இருந்தாலும் அருண்விஜய் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்க 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டு ’முறை மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அருண்விஜய் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளில் ஒரு சில வெற்றிப் படங்கள் மட்டுமே தந்துள்ளார். அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 2015இல் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் தான். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு ’குற்றம் 23’ ’தடம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் வரிசையாக கிடைத்தன என்பதும் தற்போது அவர் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அருண்விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு பூர்வி மற்றும் ஆர்னவ் விஜய் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது மகள் பூர்வாகின் 13 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அருண் விஜய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியமடைந்து அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அருண் விஜய் தனது மகள் குறித்து கூறியிருப்பதாவது: என் இளவரசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூர்வி, ஒவ்வொரு நாளும் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றாக இருக்கின்றீர்கள். நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மீண்டும் ஒரு அருமையான வருடம் உங்களுக்கு அமையும். எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் எளிமையானவராகவும் சிரித்து கொண்டே இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz