அருண்விஜய்யின் 'குற்றம் 23' சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

ஒவ்வொரு வாரமும், அந்தந்த வார இறுதி சென்னை பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

பெரும் எதிர்ப்பார்புடன் அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய்யின் நடிப்பில் வெளிவந்த 'குற்றம் 23' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 19 திரையரங்குக வளாகங்களில் 177 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.60,38,210 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூகவலைத்தளங்களில் கிடைத்த வரவேற்பு காரணமாக முதல் நாளை விட இரண்டாவது நாளில் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்துள்ளது என்பது இந்த படத்தின் அதிக ஓப்பனிங் வசூலுக்கு ஒரு காரணம். அபாரமான ஓப்பனிங் வசூல் கொடுத்துள்ள இந்த படம் அருண்விஜய்யின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் இளையதளபதி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கதையின் ஒருபகுதி கடந்த 80களில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தம்பதிக்கு பிறந்த நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்...

அஜித்தின் 'விவேகம்' படத்தில் அக்சராஹாசன் கேரக்டர் என்ன?

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் வெளியாகவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்...

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில கடந்த சில வருடங்களாக உலக தரத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த துறைக்கு புதியதாக வந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில கடந்த சில வருடங்களாக உலக தரத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த துறைக்கு புதியதாக வந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது...