தனுஷ் நடிக்க வேண்டிய கதையில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் அப்டேட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பின் போது தனுஷிடம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஒரு கதையை சொன்னதாகவும் இந்த கதையில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்த நிலையில் தான் தற்போது இந்த கதையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து லோகேஷ் கனகராஜ்க்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது லோகேஷ் கனகராஜை சந்தித்து அருள் மாதேஸ்வரன் ஒரு கதையை சொன்னது உண்மைதான் என்றும் ஆனால் இந்த கதையை அவர் தனுஷிடம் சொல்லி இருந்தார் என்றும் தனுஷூக்கு அதிக கமிட்மெண்ட் இருப்பதால் தற்போது லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறினர்.
ஆனால் அதே நேரத்தில் ’கூலி’ படத்தை முடித்தவுடன் கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்குவார் என்றும் அதன் பிறகு தான் அவர் அருண் மாதேஸ்வரன் படத்திற்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com