அருண்ராஜா காமராஜின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகர் ஹீரோவா?

’கனா’ மற்றும் ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் சீசன் 6 எப்போது? கமல்ஹாசனா? சிம்புவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்து சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் டைட்டில்

துபாய் போனதும் கிளாமருக்கு மாறிய பிரியங்கா மோகன்: வைரல் புகைப்படங்கள்!

இதுவரை நடித்த திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு

ரஜினி, விஜய், அஜித்தின் அடுத்த படங்கள் ரிலீஸ் எப்போது?

 ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', அஜித் நடித்த 'வலிமை' மற்றும் விஜய் நடித்த 'பீஸ்ட்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிய நிலையில் தற்போது இந்த மூன்று மாஸ் நடிகர்களின் அடுத்த படங்கள் ரிலீஸ்

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டேவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள சென்ற நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அதிர்ச்சி அனுபவம்  கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் சூப்பர் அப்டேட்: அட்டகாசமான ஸ்டில்ஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'விடுதலை' படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.