close
Choose your channels

அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தின் நாயகன், நாயகி குறித்த தகவல்!

Thursday, January 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் பிரபல பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை இயக்கியஅருண்ராஜா காமராஜ் தற்போது ’’அமெரிக்கன் மாப்பிள்ளை’ என்ற வெப்தொடரை இயக்கி உள்ளார் என்பதும் இந்த தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தபடியாக அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜெய் மற்றும் தன்யா ஹோப் நாயகன், நாயகிகளாக நடிக்கும் வெப் தொடரைத்தான் அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னணி ஓடிடிக்காக தயாரிக்கப்படும் இந்த வெப்தொடர்,, அருண்ராஜா காமராஜ் இயக்கிய முந்தைய படங்களை போல் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ஜெய் ஏற்கனவே ’ட்ரிபிள்’ சென்ற வெப்தொடரில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் வெப்தொடரில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.