குட்டிக் கதையை பாராட்டிய சிம்புவுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. விஜய் பாடிய இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் குறிப்பாக குழந்தைகளிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

மேலும் இந்த பாடல் வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதால் யூடியூப்பில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இந்த பாடலை திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிம்பு குட்டிக்கதை பாடலை மிகப்பெரிய அளவில் பாராட்டியுள்ளார். சிம்புவின் பாராட்டுக்கு இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

‘குட்டிக்கதையை’ பாராட்டிய சிம்புவுக்கு நன்றி. அன்பு, பாசிட்டிவிட்டியை கூறும் குட்டிக்கதையை அதனை கடைபிடித்து வரும் சிம்பு பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கின்றது. உங்களது பாராட்டுக்கு எங்களது மிகப்பெரிய நன்றி’ என்று தெரிவித்துள்ளார். அருண்ராஜா காமராஜின் இந்த பதிவை விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.