close
Choose your channels

அன்புள்ள கில்லி'க்கு வாய்ஸ் கொடுத்த அருண்ராஜா காமராஜ்

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்பவர் இயக்கி வரும் ’அன்புள்ள கில்லி’ என்ற படத்திற்கு ஒரு பாடலை பாடியுள்ளார் பிரபல பாடகரும் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ். ஏற்கனவே இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் பாடல்களை பாடியுள்ள நிலையில் தற்போது அருண்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்

இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையில் அருண் ராஜா பாடிய இந்த பாடலை இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயற்றி உள்ளதாகவும் இந்த பாடல் ’வானம் மேலே பூமி கீழே’ என்று தொடங்குவதாகவும், இந்த பாடலை இரண்டு நாய்கள் பாடுவது போல் படத்தில் காட்சிகள் அமைந்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் செயற்கையா

செயற்கை பொருட்களால் நாம் எந்த அளவுக்கு இயற்கையை சீரழித்து விட்டோம் என்பதை விளக்குவது தான் இந்த பாடலின் கருத்து என்று கூறியுள்ள இயக்கினர் இந்த பாடலை அருண்ராஜா பாடியுள்ள பாடலுக்கு மிகப்பெரிய ஒரு பலம் கிடைத்து உள்ளது என்று கூறியுள்ளார்

இது பாடல் குறித்து கூறிய அருண்ராஜா ’இந்த பாடல் வரிகளைக் கேட்டதும் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஒரு தத்துவ பாடலையும் தாண்டி நகைச்சுவை அம்சத்துடன் கூடிய கருத்து இந்த பாடலில் இருப்பதாகவும் இந்த பாடல் மிகவும் அழகாக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.