close
Choose your channels

அருவி இயக்குனர் அருண்பிரபுவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அருவி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திருமணம் நேற்று நடந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில், நடிகை அதிதி பாலன் நடித்த ’அருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில விருதுகளை பெற்றுத் தந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ‘வாழ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அருண் இயக்குனர் பிரபு புருஷோத்தமன், டீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.