காலா படத்தில் ரஜினியின் பெயரில் மற்றொரு நடிகர்

  • IndiaGlitz, [Friday,June 16 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மும்பையில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது 'சென்னை 28' பட நடிகரும் வெங்கட்பிரபுவின் நண்பருமான அரவிந்த் ஆகாஷ் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் மராத்தி போலீஸ் கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் ஆகாஷ் கேரக்டரின் பெயர் சிவாஜிராஜ் கெய்க்வாட் என்பதாம். இது ரஜினியின் ஒரிஜினல் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. 'காலா' படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்ட போதிலும் ரஜினியை இன்னும் சந்திக்கவில்லை என்ற குறை அவருக்கு உள்ளதாம்

ரஜினி நடித்த 'அருணாச்சலம்' படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக தான் நடித்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி தனது தாயாரும் ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் குரூப் டான்சராக நடித்துள்ளதாகவும் அரவிந்த கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் ரஞ்சித்தை தனக்கு 'கோவா' படத்தில் இருந்தே தெரியும் என்றும் அவர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் 'காலா' படத்தில் நடிக்க ரஞ்சித் அழைத்ததும் ஒருநிமிடம் கூட யோசிக்காமல் உடனே கிளம்பி வந்துவிட்டதாகவும் அரவிந்த் கிருஷ்ணா கூறியுள்ளார்.