த்ரிஷாவுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்த அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக இருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது.
கடந்த சில மாதங்களாக 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மலேசியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கினர். இந்நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாடு திரும்பியதாகவும் அரவிந்தசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் த்ரிஷாவுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் வினாயகமூர்த்தி என்பவர் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.