கொரோனா வைரஸ்: நடிகர் அரவிந்தசாமியின் பொறுப்பான டுவீட்

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவிட்டதை அடுத்து மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, ஒவ்வொரு குடிமகன்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிரபலங்கள், திரையுலகினர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் நடிகர் அரவிந்தசாமி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பொறுப்புள்ள சமூக அக்கறையுடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம் மக்களே, நாம் அனைவரும் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உடல்நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்தசாமியின் இந்த டுவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விசா இல்லை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவிட்டது என்பதும் சுமார் 60 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 123 நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனாவுடன் பள்ளிக்கு சென்ற மாணவி: அதிரடி நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம்

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களால் இந்தியாவிலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது

நடக்கும் என்பார் நடக்காது: கஸ்தூரிக்கு கிடைத்த அதிரடி வெற்றி 

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில்

ரஜினி வீட்டின் முன் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள்: அரசியல் அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 5ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில்