ஆர்யாவின் 36வது படத்தின் அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் யார் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ஆர்யாவின் 36-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவலை அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு, ’அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆர்யா, அதன் பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து உள்ளார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், ஆர்யாவின் 36-வது திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’ரன் பேபி ரன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.
மோகன்லால் நடித்த ’எம்புரான்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி, இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதாகவும், ’காந்தாரா’ படத்திற்கு இசையமைத்த அக்னீஷ் லோக்நாத் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர், ஜூன் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் ஆர்யா தற்போது ’மிஸ்டர் எக்ஸ்’ மற்றும் ’வேட்டுவம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்களை முடித்துவிட்டு ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
To the jungles within…
— Arya (@arya_offl) June 7, 2025
First Look Poster and Title Teaser Launch of my next on June 9th at 5 PM IST.#Arya36@arya_offl @ministudiosllp @vinod_offl @JiyenKrishna @AJANEESHB @aditi1231 pic.twitter.com/0ppJVZEuth
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com