பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி: பசுபதிக்கு அட்வைஸ் செய்த ஆர்யா

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி என டுவிட்டருக்கு வந்த நடிகர் பசுபதிக்கு நடிகர் ஆர்யா அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பா ரஞ்சித் இயக்கிய ’சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் ஆர்யா மற்றும் பசுபதி ஆகிய இருவரது நடிப்பும் அபாரமாக இருந்ததாக அனைத்து விமர்சனங்களும் தெரிவித்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக பசுபதியை ஆர்யா சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சியின் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


 
இந்த நிலையில் ஆர்யா ஏற்கனவே டுவிட்டரில் இருக்கும் நிலையில் பசுபதியும் தற்போது டுவிட்டருக்கு வந்துள்ளார். பசுபதி பெயரில் ஏற்கனவே பல போலி அக்கவுண்ட் டுவிட்டரில் இருக்கும் நிலையில் அவர் தற்போது ஒரிஜினலாக வந்திருப்பதை அறிந்த ஆர்யா அவரை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ஆர்யா பசுபதிக்கு கூறிய அட்வைஸில், ‘வாத்தியாரே இதுதான் டுவிட்டர். பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பெயரில் இங்க நிறைய பேரு இருக்காங்க தெரிஞ்சும் ஒரிஜினல் நான்தான்னு உள்ள வந்த பார்த்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியரே, இந்த உலகத்துக்குள்ள போகலாம் என்று கூறி பசுபதியின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடி-ஐ பதிவு செய்துள்ளார். ஆர்யாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்யாவின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த பசுபதி, ‘ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்ன்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒண்ணுன்னா மொத ஆள வந்துருவேன், நான் உன் சைக்கிள்ளேயே பின்னாடி உட்கார்ந்துக்கிறேன், என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ’ என்று கூறியுள்ளார்.