ஆர்யா அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,April 04 2022]

நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்றும் ’கேப்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ’கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரே ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

More News

நெல்சனின் 'தலைவர் 169' படத்தின் கதை இதுதானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்யும் வினய்: யார் அந்த நடிகை?

நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமந்தா-நாக சைதன்யாவை இணைத்து வைக்க பெண் இயக்குனர் முயற்சியா?

சமந்தா மற்றும் நாக சைதன்யாவை மீண்டும் இணைத்து வைக்க பெண் இயக்குனர் ஒருவர் முயற்சிப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'அஜித் 61' படத்தில் இணையும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்!!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'அஜித் 61'  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

'மாநாடு 2' என எஸ்.ஜே.சூர்யா வர்ணித்த விஷால் படம்: லேட்டஸ்ட் அப்டேட்!

 சிம்பு நடித்த 'மாநாடு' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா அடுத்து விஷாலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அந்த படத்தை 'மாநாடு 2'  என்று சொல்லலாம்