ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா தம்பதிக்கு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்யா தற்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக மாறிவிட்டார் என்றும், ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், தான் தற்போது மாமாவாகிவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தி இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ!

“கோடி நன்மைதரும் ஆடி மாதம்” என்று நமது முன்னோர்கள் ஆடி மாதத்தைப் பற்றி சிறப்பாகக் கூறுகின்றனர்.

தல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தல அஜித்துக்கு அளவில்லாத ரசிகர்கள் கூட்டம் இருப்பது தெரிந்ததே.

மழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி?

பருவமழை காலங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் டைபாய்டு, டெங்கு, மலேரியா முதற்கொண்டு மஞ்சள் காமாலை வரை பல நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த 'திட்டம் இரண்டு' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

செப்டம்பரில் கெளதம் மேனனின் அடுத்த படம் ரிலீஸா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும்,