close
Choose your channels

ஆர்யா-சாயிஷா மகளின் க்யூட் வீடியோ.. இணையத்தில் வைரல்

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா - சாயிஷா தம்பதிகளின் மகள் இருக்கும் க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ஆரியானா என்ற பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்தாலும் தங்களது மகளின் புகைப்படமோ வீடியோவோ அதிகமாக பதிவு செய்வதில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது தாயார் மற்றும் மகளுடன் பண்ணை வீட்டில் இருக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சாயிஷாவின் மகள் இருக்கும் க்யூட் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.