close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, June 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 'கஜினிகாந்த்' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் அவர் தற்போது தமிழில் 'காப்பான்', 'மகாமுனி' மற்றும் 'டெடி' ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்ட் மாதமும் மற்ற படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஆர்யா நடித்து வரும் மலையாள திரைப்படமான 'Pathinettam Padi' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மம்முட்டி, ஆர்யா, உன்னி முகுந்தன், அஹானா கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.