close
Choose your channels

ரஜினிக்காக 1450 கிமீ சைக்கிள் ஓட்டும் ஆர்யா

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹாலிவுட்டில் 2.0 படத்தின் மெகா பலூன் சமீபத்தில் பறக்கவிடப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் நடிப்பை அடுத்து சைக்கிள் போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும் நடிகர் ஆர்யா, நாளை லண்டனில் நடைபெற இருக்கும் 1450 கிமீ தூர சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்யாவுக்கு '2.0' படத்தயாரிப்பு நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது. இந்த தகவலை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

2.0 படம் போட்ட டிசர்ட்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் போட்டு ஆர்யா 1450 கிமீ சைக்கிள் ஓட்டவுள்ளது இந்த படத்தின் புரமோஷனாகவும் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.