ஆர்யாவுடனான நட்பை முறித்துக் கொண்ட விஷால்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

தமிழ் திரையுலகில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நெருங்கிய நட்புடன் உள்ளவர்கள் என்றும் இருவரும் இணைந்து நடித்த ’அவன் இவன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திரையிலும் திரைக்கு வெளியேயும் நட்புடன் இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா முதல் முதலாக ஒருவருக்கொருவர் எதிரிகளாக உள்ளனர்

ஆம் விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் நடித்த ’இருமுகன்’ படத்தை அடுத்து இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷால் நடிக்க உள்ளார். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்க உள்ளது

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் இருவருக்கும் அதிரடி சண்டை காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. முதன்முதலாக ஆர்யா மற்றும் விஷால் திரையில் மோதவுள்ளது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 

More News

யோகிபாபுவுக்காக மூன்று மாதம் காத்திருந்த பிரபல நடிகர்: ஒரு ஆச்சரிய தகவல்

பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று 'கோமாளி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

காஞ்சி மடத்திற்காக பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரின் தீவிர பக்தர் என்பது தெரிந்ததே.

இன்ஸ்டாவில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட முதல் நபர்...! இதனால் வரும் வருமானம் எவ்வளவு தெரியுமா..?!

இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் நபராக ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆனார்.

டூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..!

Samsung Galaxy Z Flip செவ்வாயன்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிறுவனத்தின் Galaxy S20 ப்ளாஷ்கிரிப் சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆர்யா-சாயிஷா ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அப்டேட்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஆர்யா-சாயிஷா ஜோடியும் ஒன்று என்பது தெரிந்ததே.