close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

Sunday, June 6, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா என்பதும் இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’டெடி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சார்பட்டா பரம்பரை’ மற்றும் விஷாலுடன் அவர் நடித்து முடித்துள்ள ’எனிமி’ ஆகிய திரைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்த படத்தை விஜய்சேதுபதி பட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’சூது கவ்வும்’ மற்றும் ’காதலும் கடந்து போகும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி தான் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz