பா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா! டைட்டில் குறித்த தகவல்

கடந்த ஆண்டு மகாமுனி, காப்பான் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆர்யா தற்போது ’டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் ரஜினி நடித்த ’காலா’ ’கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். ஆர்யாவின் 30வது படமாக உருவாகவிருக்கும் இந்த படம், குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்திற்கு ‘சல்பேட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஆர்யா பாடிபில்டராக மாறி மாறி உள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் கூடுதல் விபரங்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து ஆர்யா தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது ’வலிமையாக இருப்பது மட்டும்தான் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு. நீங்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்கள் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக துஷாரா என்பவர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கலையரசன், ராமச்சந்திர ராஜூ உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த படமான 'மிஸ் இந்தியா' திரைப்படம்  மார்ச் 6ஆம் தேதி வெளியாகும்

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் சீமான், பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் முடிவடைந்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் தனுஷ் நடித்த பட்டாஸ்' திரைப்படங்களை சமீபத்தில் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ்

'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு