close
Choose your channels

ஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்!

Saturday, June 12, 2021 • தமிழ் Comments

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சார்பாட்டா பரம்பரை’ விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அவர் விஷாலுடன் நடித்த ’எனிமி’ மற்றும் சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ ஆகியவை விரைவில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது ஆர்யா தயாரித்து நடிக்கும் ஒரு திரைப்படத்தை பிரபல இயக்குநர் சாந்தகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது

சமீபத்தில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’மகாமுனி’ திரைப்படத்திற்கு 9 சர்வதேச விருதுகள் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஆர்யாவின் படத்தை மீண்டும் சாந்தகுமார் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான திரைக்கதையை அவர் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் ஆர்யாவே நடிக்க போகிறார் என்றும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz