close
Choose your channels

மொட்டை தலையுடன் ஆர்யா நடிக்கும் படம்

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் ஆர்யாவுக்கு சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆர்யா தற்போது 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'பருத்திவீரன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய அமீர் இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மொட்டை தலையுடன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆர்யா, அமீர் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.