ஆர்யாவின் திருமணம் குறித்த அவரே வெளியிட்ட முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

தமிழ் திரையுலகில் ஆர்யா, விஷால் இருவரின் திருமணம் எப்போது என்று பலர் கேள்விகள் எழுப்பியுள்ளனர். நடிகர் சங்க கட்டிடம் முடிந்தபின்னர் தான் திருமணம் என்று விஷால் ஒருபுறம் உறுதியாக இருக்கும் நிலையில் நடிகர் ஆர்யாவின் திருமணம் வெகுவிரைவில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு ஜிம் வீடியோவில் ஆர்யாவின் திருமணம் குறித்த தகவல் கசிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

ஜிம் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோ என்னுடைய நண்பர்கள் விளையாட்டுத்தனமாக வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவில் உள்ள எல்லா விஷயங்களும் உண்மைதான். நான் கல்யாணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருக்கின்றேன்

பொதுவாக அனைவரும் தங்களுடைய வாழ்க்கை துணைவரை வேலை பார்க்கும் இடம், நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் மூலம் அல்லது இணையதளங்கள் மூலம் தேடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு பெரிய எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் கிடையாது. உங்களுக்கு என்னை பிடித்திருந்தால், நான் ஒரு நல்ல வாழ்க்கை துணைவனாக இருப்பேன் என் நீங்கள் நினைத்தால் உடனே எனக்கு போன் மூலம் அழைப்பு விடுக்கவும் என்று கூறி ஒரு மொபைல் எண்ணையும் அறிவித்துள்ளார். இது விளையாட்டுக்காகவோ, ஏமாற்றுவதற்காக செய்யும் அறிவிப்பு அல்ல' என்று ஆர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆர்யாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

நரகாசுரன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துருவங்கள் 16' என்ற சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அடுத்த படமாக 'நராகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தளபதி 'மெர்சல்' படத்தின் உலகளாவிய மெர்சலான வசூல் விபரம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், ஒருசில அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பையும் பெற்றது.

மந்த்ராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் பாடல்கள் சமீபத்தில

மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சியான சந்திப்பு

நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பல்துறைகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்

தீபிகாவின் தலை காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

தீபிகா நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.