VSOP ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 17 2015]

பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றி கூட்டணியான எம்.ராஜேஷ் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க". இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 21ஆம் தேதியும், மற்ற பாடல்கள் ஜூலை 29ஆம் தேதியும், படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் வாசு மற்றும் சரவணன் ஆகிய நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டால் ஏற்படும் விளைவுகளை காதல் மற்றும் காமெடி கலந்து எம்.ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள ஆர்யாவும் சந்தானமும் உண்மையிலேயே சிறந்த நண்பர்கள் என்பதால் திரையிலும் இவர்களது நட்பு இயல்பாக அமைந்துள்ளதாகவும், தமன்னா இந்த படத்தில் வித்தியாசமாக அதே நேரத்தில் சிறப்பாக காமெடியும் செய்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் 'தாமிரபரணி' பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், ரேணுகா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் படம் என்றாலே கண்டிப்பாக ஒரு பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது வழக்கம். அதேபோல், இந்த படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை ஆர்யா, தனது சொந்த நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

More News

'பாகுபலி'யில் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீதேவி இழந்தது எப்படி?

கடந்த வாரம் வெளியான இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான திரைப்படமான பாகுபலி' ...

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த நடிகை

இளையதளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடிவரும் வழக்கத்தை கடந்த பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.....

மதனிடம் இருந்து மதன் பெற்ற 'பாயும் புலி'

வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்த விஷாலின் 'பாயும் புலி' படத்தின் உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...

புலி-பாயும் புலி. என்ன வித்தியாசம்?

விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படமும், விஷால் நடித்து முடித்துள்ள 'பாயும் புலி' திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால்...

சகலகலாவல்லவனாக மாறிய அப்பாடக்கர்?

சமீபத்தில் 'ரோமியோ ஜூலியட்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ரவி, தற்போது அதே உற்சாகத்துடன் 'அப்பாடக்கர்' படத்தையும் நடித்து முடித்துவிட்டார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவியோடு த்ரிஷா, அஞ்சலி, பிரபு, விவேக், சூரி, 'நான்கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை பூர்ணா, சிறப்பு த&