ஆர்யாவின் VSOP-க்கு 'U' சர்டிபிகேட்

  • IndiaGlitz, [Thursday,July 30 2015]

'ஆர்யாவின் 25வது படமான 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு 'U' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஒரு தயாரிப்பாளராக ஆர்யா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் பாடல்கள் வெளியானதோடு, படத்தின் இரண்டு நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்றுள்ள ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தமன்னா இந்த படத்தில் முதன்முதலாக ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 14 என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்களும் இன்றைய செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, சந்தானம், தமன்னா, தாமிரபரணி பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், ரேணுகா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ல இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். நீரவ் ஷா, ஒளிபதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்கு இணையாக ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தனுஷுக்கு வில்லனாகும் 'பாயும் புலி' நடிகர்

சமீபத்தில் 'மாரி' என்ற சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்த தனுஷ் தற்போது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் இறுதிக்கட்ட...

விஜய்யின் 'புலி' பிரஸ்மீட். சில துளிகள்

விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்...

தனுஷ் மீதான அவதூறு வழக்கிற்கு தடை. சென்னை ஐகோர்ட் உத்தரவு

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெரும்புகழ் பெற்று தந்தது....

VSOP படத்தின் டிராக் லிஸ்ட் விபரம்

'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் எம்.ராஜேஷ், ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்...

விஜய்யின் 2வது வெற்றிப்படமா புலி?

விஜய்-மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜில்லா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று தெலுங்கில் ரிலீஸாகி நல்ல ஓபனிங்...