'கடம்பன்' ஆர்யாவுக்கு கிடைத்த ஆறுதலான வசூல் செய்தி

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

நடிகர் ஆர்யா நடித்த படங்களின் வசூல் கடந்த சில ஆண்டுகளாகவே திருப்திகரமாக இல்லாத நிலையில் அவர் மிகவும் ரிஸ்க் எடுத்து, உடலை வருத்தி நடித்த படம் 'கடம்பன்'. கடின உழைப்புக்கு என்றுமே தோல்வியில்லை என்ற நிலையில் இந்த படத்தின் வசூல் அவருக்கு ஆறுதலை அளிக்கும் வகையில் கிடைத்துள்ளது.

'கடம்பன்' திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 17 திரையரங்குகளில் 171 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.48,54,790 வசூல் ஆகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததால் ஆர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சென்னையை போலவே தமிழகம் முழுவதிலும் இந்த படம் சராசரி வசூலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

சிவலிங்கா'வின் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மொட்டசிவா கெட்டசிவா' சுமாரான வசூலையே தந்த நிலையில் கடந்த வெள்ளியன்று அவர் நடித்த மற்றொரு படமான 'சிவலிங்கா' ரிலீஸ் ஆனது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது...

தனுஷின் 'ப.பாண்டி'யின் ஃபவர்புல் சென்னை வசூல்

திரையுலகில் தனுஷ் கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு அவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற துறைகளில் வெற்றி பெற்று தற்போது இயக்குனர் துறையிலும் அவர் பாஸ் ஆகிவிட்டார்...

சீயான் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெடுவது சீயான் விக்ரம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஷங்கரின் 'ஐ' உள்பட பல படங்களின் கேரக்டராகவே அவர் மாறிவிடும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது...

வேலூர் மக்களின் தாகம் தீர்க்கும் தளபதி ரசிகர்கள்

கோடை தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் அதிகளவு வெப்பம் பதிவாகும் வேலூரில் சொல்லவே வேண்டாம். சாலைகளில் உள்ள தார் இளகும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது...

'பாகுபலி 2' படம் தான் கடைசி. விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு

கடந்த சில ஆண்டுகளாக பெரிய நடிகர்களின் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இனிமேல் பெரிய நடிகர்கள் அல்லது பெரிய பட்ஜெட் படங்களின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்காமல் பிரித்து பிரித்துதான் வாங்கப்படும் என்று விநியோகிஸ்தர்